;
Athirady Tamil News

ஒருநாள் போட்டியில் பதற்றம் – ரசிகர்களுக்கு இடையில் மோதல்..!!

0

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையில் நேற்று (01) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ள பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றை போட்டி முடிவடைந்து பார்வையாளர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது போக்குவரத்து கடைமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் தலையில் நபர் ஒருவர் கண்ணாடி போத்தல் ஒன்றினால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த நபரை பொலிஸார் துரத்திப்பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண பிரதேச சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் இந்த தாக்குதலை நிறுத்துமாறும் தான் மாகாண சபை உறுப்பினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினுடம் பொலிஸார் அவருக்கு தகாத வார்த்தைகளால் பேசி தன்னை தடிகளாலும் பொலிஸாரின் இடுப்பு பட்டியினாலும் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் தாக்கும் போது குறித்த நபர் தான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை எனவும் வேறு ஒரு வௌ்ளை நிற ஆடை அணிந்த நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தான் கூறிய எதனையும் செவிமடுக்காத பொலிஸார், தன்னை தாக்கி கைது செய்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் வௌ்ளை ஆடை அணிந்திருந்த ஒருவரை தம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிப்பதாக தம்புள்ள பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nineteen =

*