;
Athirady Tamil News

வவுனியாவில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடல்! முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பு..!! (படங்கள்)

0

வவுனியாவிற்கு முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (02) வருகை தந்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கனிபா தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நல சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றினை மேம்படுத்தல் மற்றும் கிராமங்களில் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்,
பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம் தனியார் நிறுவனங்கள் கடன் திட்டங்களை வழங்கி அங்கு பேசப்படும் பேரங்கள் தொடர்பாகவும், மத்திய வங்கியின் கீழ் வரும் நிறுவனங்களை அவ்வாறான செயற்பாடுகளை கவனிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றினை தடை செய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், புதிதாக செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை மாவட்ட அதிகாரிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் விபரித்திருந்தனர்.

கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண பிரதி அபிவிருத்தி அமைச்சர் கே.கே.மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், த.தியாகராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள்,அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − thirteen =

*