;
Athirady Tamil News

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு – தேச துரோக வழக்கு ஒத்திவைப்பு..!!

0

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ´நான் குற்றம் சாட்டுகிறேன்´ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உரையாற்றியிருந்தர்.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு பொலிஸார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நேற்று (02) காலை 10.30 மணிக்கு சென்னை 5 வது செஷன்ஸ் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ நீதிமன்றில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, வைகோ மீதான குற்றம் குறித்து படித்துக்காட்டி குற்றச்சாட்டை பதிவு செய்தார். அதற்கு வைகோ, நான் இந்திய அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தது உண்மை தான். ஆனால், நான் குற்றவாளி அல்ல என நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து, நீதிபதி வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*