;
Athirady Tamil News

வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் – அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நோயாளர்கள்..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கும் அரச வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவற்றுக்கான தீர்வுகள் எவையும் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை´ என தெரிவித்து இன்று (03) வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயல் இழந்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வெளிநோயளர் பிரிவு முழுமையாக செயல் இழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற் கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்குவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வைத்தியர்களின் சேவை நேரக் கொடுப்பனவு, சிங்கப்பூர் உடனான ஒப்பந்தம், மருத்துவர்களுக்கான வாகன சலுகை, வைத்தியத் துறையின் மீது அதிக வரி விதித்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தியே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + thirteen =

*