;
Athirady Tamil News

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் சரஸ்வதி சிலை திறப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 1992 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் புதிதாக அமைக்கப்பட்ட சிலையினை அக்காலப்பகுதியில் கல்வி கற்பித்தல் ஆசிரியர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

1992 ஆம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்களை பாடசாலையின் முகப்பு வீதியில் இருந்து மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு அவர்களின் பொற்கரங்களால் கல்வி தாயின் சரஸ்வதி சிலையை திறந்துவைக்கப்பட்டுள்ளது

மகா வித்தியாலயாம் 1992 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவிலிருந்து சிற்ப கலைஞரை அழைத்து வரப்பட்டு அவர்கள் வடிவமைக்கப்பட்ட கல்வி தாய் சரஸ்வதியின் சிலை பாடசாலையை மிகவும் அழகு படுத்தியமையும் குறிப்பிடத்தக்க விடயம்

இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலையின் மூத்த ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*