;
Athirady Tamil News

தலித் பெண் அதிகாரிக்கு குடிக்க தண்ணீர் தர மறுப்பு – 6 பேர் மீது வழக்கு..!!

0

உத்தரபிரதேச மாநிலம் கசாம்பி மாவட்டத்தை சேர்ந்த கால்நடைத்துறை துணை தலைமை அதிகாரி டாக்டர் சீமா. தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர், மேலிட உத்தரவின் பேரில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பவா பூராக் கிராமத்துக்கு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

2 கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தார்.

அப்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டார். ஆனால், அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தண்ணீர் வழங்க மறுத்துவிட்டனர்.

2½ மணி நேரமாக தண்ணீர் குடிக்காமலேயே இருந்தார். சீமா நீரிழிவு நோயாளி. தண்ணீர் குடிக்காததால் அவருக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்துக்கு சென்று தண்ணீர் குடித்தார்.

இது சம்பந்தமாக டாக்டர் சீமா, மாவட்ட கலெக்டர் மனீஷ்குமார் வர்மாவிடம் புகார் தெரிவித்தார். அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குப்தா விசாரணை நடத்தினார். அதில், டாக்டர் சீமாவுக்கு தண்ணீர் கொடுக்காமல் அவமதித்தது உண்மைதான் என தெரிய வந்தது.

இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பெண் தலைவர் ஷிவ் சாம்பத், அவருடைய கணவர் பங்கஜ் யாதவ், சாய்பாசா கிராம பஞ்சாயத்து தலைவர் அன்சார் அலி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜலார் திவாரி, பஞ்சாயத்து அதிகாரி ரவிதத் மிஸ்ரா மற்றும் ராஜேஷ்சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலித் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*