;
Athirady Tamil News

சமூக வலைதளங்களை கண்காணிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..!!

0

சமூக வலைதளங்களை கண்காணிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிடும் மற்றும் பகிரும் கருத்துக்களை தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கண்காணிப்பில் இந்த தனியார் நிறுவனங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது மக்களின் கருத்துரிமையில் குறுக்கிடும் செயல் என்று கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இதற்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முழுமையான ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் எனவே அதனை திரும்பப் பெறுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 2 =

*