;
Athirady Tamil News

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு மதிப்பெண் ஊழலில் தனியார் கல்லூரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் – ராமதாஸ்..!!

0

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு மதிப்பெண் ஊழலில் தனியார் கல்லூரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நீண்டகாலமாகவே முறைகேடு நடைபெற்று வந்துள்ளதாகவும், மீனா என்கிற மாணவி அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக் காவல்துறையிடம் கொடுத்த பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2012 முதல் 2018 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 26 லட்சத்துக்கு மேற்பட்டோர் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்ததாகவும், அவர்களில் 20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மறுமதிப்பீட்டுக் கட்டணமாக அண்ணா பல்கலைக்கழகம் சுமார் இருநூறு கோடி ரூபாயைச் சட்டப்பூர்வமாகவே பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு விடைத்தாளுக்கும் பத்தாயிரம் ரூபாய் வீதம் கையூட்டுப் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகத் தேர்ச்சி பெறும் பொறியியல் கல்லூரிகளில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள் என்பதால் தனியார் கல்லூரிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்ட மாணவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள், தனியார் கல்லூரிகள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*