;
Athirady Tamil News

கேரளாவில் முதல்முறையாக முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டிய பெண் போலீஸ்..!!

0

கேரள மாநிலம் திருச்சூர் ராமவர்மபுரத்தில் போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடித்த போலீசாருக்கு வழி அனுப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். அப்போது பயிற்சி முடித்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார்.

பினராயி விஜயன் சென்ற ஜீப்பை அந்த பயிற்சி பள்ளியின் பெண் போலீஸ்காரரான சசீந்திரா என்பவர் ஓட்டிச் சென்றார். இதன் மூலம் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டிய முதல் பெண் போலீஸ் என்ற சிறப்பை சசீந்திரா பெற்றார்.

பெண் போலீஸ் சசீந்திரா அங்கு போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சியும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ஜெயன் திருச்சூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். போலீஸ் வேலையில் சேருவதற்கு முன்பு சசீந்திராவும் அந்த பயிற்சிப்பள்ளியில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

போலீசான பிறகு அவர் கேரள போலீஸ் டி.ஜி.பி. சந்தியாவுக்கு ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். அவரது ஜீப் ஓட்டும் திறமை காரணமாக போலீஸ் அகாடமியில் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் பணி வழங்கப்பட்டது. அங்கு சிறந்த பயிற்சியாளர் என்ற பெயர் அவருக்கு கிடைத்ததால் தற்போது முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டி சாதனை படைத்து உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + ten =

*