விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் இருப்பதாக வந்த புகாரை திட்ட வட்டமாக மறுத்துள்ளது ஏர் இந்தியா..!!

ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் இருப்பதாக வந்த புகாரை அந்நிறுவனம் திட்ட வட்டமாக மீண்டும் மறுத்துள்ளது.
கடந்த மாத மத்தியில் நேவார்க்-மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களின் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் மூட்டைப் பூச்சி இருந்ததாக பயணி வெளியிட்ட புகைப்படம் சமூக வதைளங்களில் பரவியது.
மேலும் மற்றொரு பெண் பயணி ஒருவர், தம் கையில் மூட்டைப் பூச்சி கடித்த தடம் இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டு அப்படி ஏதும் இல்லை என மறுத்திருந்தது.
இந்நிலையில், தங்களது தொழில்நுட்பக் குழுவைக் கொண்டு, விமானம், இருக்கை, லாண்டரிக்கு அனுப்பக்கூடிய பொருட்கள் என அனைத்தையும் முழுவதும் சோதனை செய்துவிட்டதாகவும், அப்படி எந்தப் பூச்சியும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.