;
Athirady Tamil News

பாடசாலை மாணவன் விபத்தில் காயம் – CCTV காட்சி..!!

0

பாடசாலை மாணவன் விபத்தில் காயம் – CCTV காட்சி
மெதகம முன்மாதிரி வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்ப்பக்கத்தில் தந்தை இருப்பதை கண்ட மாணவன் வீதியின் இரு பக்கங்களையும் அவதானிக்காமல் மஞ்சள் கடவை ஊடாக ஒரே தடவையில் பாதையை கடக்க முற்பட்ட போது வேன் ஒன்றுடன் மோதியுள்ளார்.

காயமடைந்த மாணவன் நெலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்கான உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றுடனே மாணவன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பாடசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + ten =

*