;
Athirady Tamil News

கிருஷ்ணரின் அவதாரம் புத்தர் – தாய் தந்தை உறவினர்கள் அனைவரும் இந்து மதம்..!!

0

வடக்கில் புதிதாக அதிகளவில் அமைக்கப்படுகின்ற விகாரைகள் தொடர்பாக தமிழ் மக்கள் அதிகம் கரிசனை கொள்ள தேவை இல்லை என பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (02) சென்றிருந்த பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வடக்கில் அதிகரிக்கும் விகாரைகள் தொடர்பாக தமிழ் மக்கள் அதிகரமாக கரிசனை கொள்ள தேவை இல்லை. இங்கு அனைத்து மதத்திலும் இந்து மக்களே அதிகமாகவுள்ளனர். அதில் கிருஷ்ணரின் ஏழாவது அவதாரமாக புத்தர் உள்ளார்.

புத்தரின் தாய் தந்தை உறவினர்கள் அனைவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். ஆகவே இங்கே விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக பெரிதாக கரிசனை கொள்ள தேவையில்லை என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன் அது தொடர்பாக நல்லை ஆதின முதல்வர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரிடமும் கலந்துரையாடிருந்தேன்.

அதே போன்று இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் மதத்தின் ஒருமைப்பாட்டின் ஊடாக தீர்க்கும் வகையிலேயே நல்லை ஆதின முதல்வருடன் கலந்துரையாடினேன எனவும் பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 9 =

*