;
Athirady Tamil News

நாணயத்தை விழுங்கிய சிறுமி -மருத்துவமனையில்..!!

0

வாயினுள் வைத்திருந்த 2 ரூபா நாணயத்தை எட்டு வயதுச் சிறுமி விழுங்கியுள்ளார். சிறுமி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் சாலையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிய வேளையில் வாயினுள் இரண்டு ரூபா நாணயத்தை வைத்திருந்த சிறுமி, திடீரென வாயினுள் வைத்திருந்த நாணயத்தை அவர் விழுங்கியுள்ளார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் நாணயத்தை விழுங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + twenty =

*