;
Athirady Tamil News

மிருசுவில் தாக்குதல் சம்பவம்- கெற்பேலியில் காருடன் சாரதி கைது..!!

0

காரில் வந்து தாக்குதல் நடாத்தி விட்டுச் சென்றோரைத் துரத்திச் சென்ற உழவு இயந்திரச் சாரதியை கல் மற்றும் போத்தல்களால் விசித் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் .

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் மிருசுவில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடப் பயன்படுத்திய காரினை கெற்பேலிப் பகுதியில் வைத்து கைப்பற்றியதுடன் அதன் சாரதியையும் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிருசுவில் வடக்குப் பகுதியில் காரில் வந்த சிலர் அப் பகுதியில் வீடொன்றின் முன்னால் ஒலி எழுப்பிவிட்டு நின்றுள்ளனர். இதனை அவதானித்த வீட்டுக்காரர் வெளியே வந்து விசாரித்த போது அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதல் நடாத்துவதைக் கண்ட மற்றொருவர் ஓடிவரவே அவரையும் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனை அவதானித்த சாலையில் வந்த உழவு இயந்திரச் சாரதி காரினைத் துரத்தியுள்ளார்.மிருசுவில் தொடருந்து நிலைய கடவையைக் கடந்த பின்னர் அங்கிருந்து கற்கள் மற்றும் போத்தல்களால் எறிந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் சாரதி காயமடைந்தார்.

காரில் வந்தவர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் கற்களால் வீசித் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்த நிலையில் உழவு இயந்திரச் சாரதி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் தேடுதல் நடாத்திய போது கெற்பேலிப் பகுதியில் சில்லு காற்றுப் போன நிலையில் அதனைத் திருத்தம் பணியில் ஈடுபட்ட சாரதியைக் கைது செய்து காரினையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + twelve =

*