;
Athirady Tamil News

காலாவதியான உணவுப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகருக்கு அபராதம்..!!

0

வவுனியாவில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 24ம் திகதி பொதுசுகாதார பரிசோதகர் க.சிவரஞ்சனால் பரிசோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்ட போது வர்த்தக நிலையமொன்றில் காலாவதி திகதி முடிவடைந்த பிஸ்கட்கள் மற்றும் விற்பனைக்குதவாத வண்டுமொய்த்த பேரீச்சம் பழம் போன்றன விற்பனை செய்யப்பட்ட நிலையில் குறித்த வர்த்தகருக்கு எதிராக ஓமந்தை பொதுச்சுகாதார பரிசோதகர் க.சிவரஞ்சனால் வவுனியா நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்து.

அதன் அடிப்படையில் இன்றயதினம் (03) குறித்த வழக்கு விசாரனைக்கு வந்ததுடன் குறித்த இரு குற்றச்சாட்டுகளுக்குமாக 13000 ரூபாய் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 8 =

*