;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இல்லை..!!

0

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

2006.11.23 ம் திகதி அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் படி உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சம்பள அதிகரிப்பு இடம்பெறும் போது அதற்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நீதிபதிகளின் சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு கிடைத்த அறிவித்தலுக்கு அமைவாக பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி 2006.11.23 ம் திகதி தீர்மானத்தின் படி செயற்படுவதா அல்லது ​வேறு வழியில் செயற்படுவதா என்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விளக்கம் கேட்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*