;
Athirady Tamil News

நியூயார்க் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச பேச்சு சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழர்..!!

0

அமெரிக்காவில் சிகாகோவில் உலகின் தலைசிறந்த பேச்சு சாம்பியனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் நியூயார்க் மாகாணத்தின் சார்பாக பங்கேற்கும் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான போட்டி அங்கு உள்ள லாங் தீவில் நடந்தது.

இதில் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர், நஸ்ஸாவ், சப்பால்க் நகரங்களில் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தினார்.

தமிழரான இவர் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் உள்ள வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். சென்னை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2 துறைகளில் எம்.எஸ். பட்டங்களையும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தையும் ஹில் கிருஷ்ணன் பெற்றுள்ளார்.

சிகாகோவில் 23-ந் தேதி நடக்க உள்ள உலக பேச்சு சாம்பியன் அரை இறுதிப்போட்டியில் நியூயார்க் மாகாணத்தின் சார்பில் டாக்டர் ஹில் கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சார்பில் தமிழர் ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அரை இறுதிப்போட்டியில் உலகின் 110 சிறந்த பேச்சாளர்களுடன் இவர் மோத வேண்டியிருக்கிறது.

அரை இறுதிப்போட்டியில் அவர் வெற்றி பெற்றால், 25-ந் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 3 =

*