;
Athirady Tamil News

ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு..!! (படங்கள்)

0

ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார்

விழிசிட்டி, ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலையின் கல்வி மற்றும் விளையாட்டு சாதனையாளர்களின் கௌரவிப்பு இன்று 04.08.2018 காலை 09 மணியளவில் பாடசாலையில் பழையமாணவர் சங்கச்செயலாளர் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினரும், பாடசாலையின் பழைய மாணவருமான பா.கஜதீபன் கலந்து கொண்டதுடன் அமெரிக்க மிஷன் திருச்சபையின் போதகரான போல் சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டுதல்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாகாணசபை உறுப்பினர் மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பொதுமக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*