;
Athirady Tamil News

அமெரிக்க பெண் ஒருவர் உயிரிழப்பு; மரணத்தில் சந்தேகம்..!!

0

சிலாம், ரிதிவெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அமெரிக்க நாட்டுப் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

68 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண் ஒன்றரை வாரங்களுக்கு முன்னர் சிலாம், ரிதிவெல்ல பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று 12 வயதுடைய இலங்கை சிறுவன் ஒருவனுடன் தங்கியிருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கொழும்பு சுற்றுலாப் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஒருவர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பல சொத்துக்கள் இருப்பதாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*