;
Athirady Tamil News

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணிகளை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் தருண் கோகோய், உம்மன் சாண்டி, சித்தராமையா, அசோக் கெலாட், ஷீலா தீட்சித் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப் பட்டியலில் 40 லட்சம் பேர் சேர்க்கப்படாத விவகாரம் மற்றும் அப்பிரச்சனையை தொடர்ந்து எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பிற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவது, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*