;
Athirady Tamil News

யாழ். இணுவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு வித்தியாசமான கெளரவம்..!! (படங்கள்)

0

யாழ்.இணுவில் இந்துக் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா கடந்த புதன்கிழமை(01) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் பிரதி அதிபர் ந. சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் கடந்த-2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகள், க.பொ. த உயர்தரம், க.பொ. த சாதாரண தரம், தரம்- 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் ஆகியோர் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் மாத்திரமின்றி கடந்த-2017 ஆம் ஆண்டில் பத்து நாட்களுக்குட்பட்ட வகையில் மிகக் குறுகிய காலப் பகுதியில் லீவினைப் பெற்றுக் கொண்ட 17 ஆசிரியர், ஆசிரியைகளும், பாடசாலைக்குக் குறித்த நேரத்திற்கு முன்னர் சமூகமளித்துக் கடமைகளில் ஈடுபடும் ஆறு ஆசிரியர்களும் விசேட பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த-2017 ஆம் ஆண்டில் மிகக் குறுகிய காலப் பகுதியில் லீவினைப் பெற்றுக் குறித்த விழாவில் கெளரவிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளின் விபரம் வருமாறு,

தி.சசீதரன், தி.தேவதயாளன், வி.ஜெயரூபன், க.பிரதீபன், ந.விஜயகுமார், கி.தவநேசன், க.உருத்திரன், த. மனோகரன், ப.சிவகுமார். செ.ஜெயகாந்தன், க.கந்தகுமார், க.சிறிகரன், கு.தர்மபாலன், ச.வாகீசன், தெ.நிறைமதி, ம.சிவானந்தன், திருமதி த. மனோகரன், திருமதி தெ.நிறைமதி, செல்வி செ. கலாவல்லி.

பாடசாலைக்குக் குறித்த நேரத்திற்கு முன்னர் சமூகமளித்துக் கடமைகளில் ஈடுபடும் ஆறு ஆசிரியர்களினதும் பெயர் விபரம் வருமாறு,

கா. தேவகாந்தன், தி.சசீதரன், செல்வி செ. கலாவல்லி, திருமதி ய. பகீரதன், திருமதி நா. திலகராஜ், க.சிறிகரன்.

குறித்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பரிசில்கள் வழங்கிக் கெளரவித்தார்.

மாணவ,மாணவிகளின் உற்சாகமான பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் பெருமகிழ்ச்சியுடன் ஆசிரியர்கள் தமக்கான பரிசில்களைப் பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, கொடுக்கக் கொடுக்க குறையாத கல்வி எனும் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி வேறு பாடசாலைகளில் இல்லாத வகையில் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கெளரவிக்கப்பட்டமை பெரு வரவேற்புக்குரியது. இவ்வாறான கெளரவிப்புக்கள் தன்னலம் கருதாமல் சேவை புரியும் ஆசிரியர் சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

மேற்படி பாடசாலையில் இவ்வாறான கெளரவிப்புக் கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அறிய முடிகிறது.

பரிசில்கள் பெற்றுக் கொண்ட ஆசிரியர்களை மாணவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + eleven =

*