;
Athirady Tamil News

தென்னஞ்சோலையாக மாறும் வவுனியா – பொலிஸ்மா அதிபரால் மரநடுகை..!! (படங்கள்)

0

தென்னஞ்சோலை மரநடுகை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வளாகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஐயசுந்தர கலந்து கொண்டு மரநடுகை நிகழ்வை ஆரமப்பித்து வைத்தார்.

நரசிங்கர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுககளை மேற்கொண்டதுடன்,ஆலயச் சூழலில் தென்னை மரங்களயும் நாட்டி வைத்தனர். பொலிஸ்மா அதிபருக்கு விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேச செயலர் கா.உதயராஜா, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்,உப தலைவர் வே.குமாரசாமி, வவுனியா பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர்,மதகுருமார்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் செயற்திட்டம் மூலம் வவுனியாவில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலும், 110 தென்னை மரங்கள் நாட்டபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + nine =

*