;
Athirady Tamil News

இலங்கைக்கு வெற்றி இலக்கு 364 ஓட்டங்கள்..!!

0

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரீஸா 102 ஓட்டங்களையும், டுமினி 92 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 75 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி இலங்கைக்கு 364 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*