;
Athirady Tamil News

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு மேடையை நோக்கி அத்துமீறி நுழைந்த வாலிபரால் பரபரப்பு..!!

0

திருப்பதியில் உள்ள தாரகராம விளையாட்டு அரங்கில் சந்திரபாபு நாயுடு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல், திறன் மேம்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர வேண்டும் என்று கோ‌ஷமிட்டவாறு அங்கிருந்து நிரூபர்கள், ஒளிப்பதிவாளர்கள் இருந்த மீடியா கேலரி வழியாக முதல்வரை நோக்கி பாய்ந்து சென்றார்.

மின்னல் வேகத்தில் அத்துமீறி நுழைந்த அந்த வாலிபரை போலீசார் பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தை சேர்ந்த நாகராஜ் என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சற்று மெத்தனமாக இருந்திருந்தாலும் முதல்வரின் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபர் மீது துப்பாக்கிக்சூடு நடத்தியிருக்க கூடும்.

ஏனெனில் முதல்வர் இருந்த மேடை, நிரூபர்கள் காலரி இடையே டி ஷோன் எனப்படும் காலியாக விடப்பட்ட பகுதி இந்த இடம் பாதுகாப்பு பகுதி ஆகும்.

முதல்வர் மேடையில் இருக்கும்போது டி ஷோன் பகுதிக்குள் ஊடுருவல் நடந்தால் ஊடுருவியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முதல்வரின் பாதுகாப்பு படையினரான கருப்பு பூனை படையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − one =

*