;
Athirady Tamil News

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் கார் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம்..!! (படங்கள்)

0

வவுனியா, வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி வைரவப்புளியங்குளம் வீதியூடாக பயணித்த கார் ஒன்றுடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்ககுள்ளானது. கார் முன்னே சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதேர விபத்து இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 20வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*