உடுவில் லவ்லேன் வீதி புனரமைப்பு..!! (படங்கள்)
உடுவில் லவ்லேன் வீதி புனரமைப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்
வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபைக்குட்பட்ட உடுவில் லவ்லேன் வீதியானது யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி வீதியானது புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் லவ் லேன் பகுதியில் இடம்பெற்றது
மேற்படி நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு கற்களைப்பரவி வீதி புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார். மாகாணசபை உறுப்பினருடன் வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையின் 14ஆம் வட்டாரமான உடுவில் தெற்கு உறுப்பினர் அன்ரன் லீனஸ், 15ஆம் வட்டாரமான உடுவில் தென்கிழக்கு உறுப்பினர் திருமதி சந்திரவதனி காந்தராசா மற்றும் ஊர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.