;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் மாநாடு..!!

0

யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

முதலாவது அமர்வு சிவயோகசுவாமிகள் அரங்காகவும் இரண்டாவது அமர்வு சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்காகவும் இடம்பெறும்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழ்நாடு பேரூர் ஆதீன முதல்வர் வண. மருதாசலம் அடிகளார், இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக் கிளையின் முதல்வர் வண. அக்ஷராத்மாநந்த மகராஜ், யாழ். சின்மயா மிஷன் முதல்வர் வண. சிதாகாசானந்தா சுவாமிகள், கந்தர்மடம் வேதாந்த மடம் ஸ்ரீமத் வேதவித்தியாசாகர சுவாமிகள் ஆகியோர் மாநாட்டிற்கு முன்னிலை வகிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் பிரபல பேச்சாளர் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் அவர்களின் தனியுரை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் காலை அமர்வில் இடம்பெறவுள்ளது. மாலை அமர்வில் அவரது தலைமையில் சிறப்புப் பட்டிமண்டபம் இடம்பெறவுள்ளது.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் இளையோரது ஆற்றுகைகளே பெருமளவில் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இந்து இளைஞர் பேரவை குப்பிளானைச் சேர்ந்த சிவபாதம் கணேஸ்குமார் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

கடந்த ஆண்டு மன்னாரில் இவர்களின் மாநாடு வெற்றிகரமாக இடம்பெற்றமை யும் அதில் பிரபல பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + thirteen =

*