;
Athirady Tamil News

மிளகாய் தூளை வீசி கொள்ளையிட்ட ஐவர் கைது..!!

0

புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பெருந்தொகை பணக் கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 10 மில்லியன் பணமும் ஜீப் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது

அந்நிறுவனத்தின் ஊழியர்களால் பணம் எடுத்துச் செல்லப்படும் வழியில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related News

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*