;
Athirady Tamil News

ஆரோவில்லில் வெளிநாட்டு மாணவி திடீர் மாயம் – போலீசார் விசாரணை..!!

0

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அனா டேனீலா கார்சியா. இவரது மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா (வயது 14).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனா டேனீலா கார்சியா தனது மகளுடன் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் வந்தார். பின்னர் அங்கேயே மகளுடன் தங்கினார். இதையடுத்து மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை ஆரோவில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார். தற்போது அந்த பள்ளியில் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 30-ந் தேதி சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல இடங்களில் தனது மகளை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஆரோவில் போலீசில் அனா டேனீலா கார்சியா புகார் செய்தார். அதில் எனது மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை காணவில்லை. அவள் செல்போனுக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. டெல்லியில் அவள் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவி சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது டெல்லிக்கு சென்றாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன வெளிநாட்டு மாணவியை தேடி போலீசார் டெல்லி சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆரோவில்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + twenty =

*