;
Athirady Tamil News

வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்து! இருவர் படுகாயம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (6) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் தாண்டிக்குளம் செல்லும் வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி எதிரே வந்த பேரூந்துக்கு வழிவிட்ட நிலையில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 4 =

*