;
Athirady Tamil News

கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் பலி..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் பயணித்த எரிபொருள் பவுசர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் ரஞ்சன் எனப்படும் 45 வயதுடைய நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 18 வயதுடைய அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*