;
Athirady Tamil News

மினுவாங்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!!

0

மினுவாங்கொட, யட்டியான சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பன்னல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒழிந்திருந்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − two =

*