;
Athirady Tamil News

கென்யா, தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்- 200 பேர் பலி 7-8-1998..!!

0

தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 220-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். டிரக்கில் ஏற்றி வந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

* 1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* 1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்காட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

* 1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

* 1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*