;
Athirady Tamil News

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வவுனியா இணைப்பாளராக ஆனந்தராஜா..!!

0

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வவுனியா இணைப்பாளராக ஆனந்தராஜா நியமனம்!

தேசிய ஓருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் தனது அமைச்சின் வவுனியா மாவட்டத்திற்கான இனணப்பாளராக குலேந்திரம் ஆனந்தராஜா என்பவரை நியமனம் செய்துள்ளார்.

தனது அமைச்சில் வைத்து இந்த நியமனக் கடிதத்தினை அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் வழங்கி வைத்துள்ளார்.

மேலும் இந்த நியமனம் தொடர்பாக கு.ஆனந்தராஜா அவர்களை தொடர்பு கொண்டு வினாவிய போது,

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு என்ற வகையில்
மக்கள் சந்திப்புக்கள் மூலம் மக்கள் குறைகளை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தனக்கு பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 11 =

*