;
Athirady Tamil News

அப்பாவிற்காக உடைந்து அழும் மகன் ஸ்டாலின்.. வரலாறு பேச போகும் புகைப்படம்..!! (வீடியோ)

0

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடைந்து அழும் காட்சி மக்களை கலங்க வைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். திமுக தொண்டர்கள் இதனால் பெரிய சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள். முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடைந்து அழும் காட்சி மக்களை கலங்க வைத்துள்ளது.

பேசிக்கொண்டே இருக்கும் போதே ஸ்டாலின் துரைமுருகன் மேல் சாய்ந்து கண்ணீர்விடும் காட்சி மனதை உருக்கும் வகையில் உள்ளது. நேற்று வரை நல்ல திடமாக இருந்த ஸ்டாலின் இன்று மொத்தமாக உடைந்து போய் இருக்கிறார். ஸ்டாலின் தனது ”அப்பா” கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலேயே இது இருந்தது. இன்று மொத்தமாக அவர் உடைந்து போய் இருக்கிறார். திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருத்தப்பட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + twelve =

*