;
Athirady Tamil News

மாடுகளைக் கடத்த முயன்றவர் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு..!! (படங்கள்)

0

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட பகுதியில் வளர்த்த மூன்று பசு மாடுகளைக் காணவில்லை என நேற்று பகல் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமைக்கு அமைவாக

தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் மகேந்திரா ரக வாகனத்தில் கடத்தப்பட்ட மாடுகளை மீட்டதுடன் வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

இச் சம்பவத்துடன் மேலும் சிலர் தொடர்பு பட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்வதற்கான ஏற்ப்பாடுகள் இடம்பெறுவதாகவும் கைது செய்யப்பட்டவரை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*