;
Athirady Tamil News

வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து சம்பந்தனுடன் பேசுவேன்”..!!

0

வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பிரதமர் றனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், அதேபோல் மேலதிகமாக 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டங்கலாயையும் கையாண்டு வருவதாகவும், விரைவில் சகல மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுத்தருவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*