;
Athirady Tamil News

மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பின் ஆசிரியர் கைது..!!

0

பலாங்கொடை நகரிலுள்ள தனியார் வகுப்பின் உரிமையாளரான ஆசிரியர் ஒருவர் இரண்டு மாணவர்களைத் தாக்கியதன் காரணமாக, கைதுசெய்யப்பட்டுள்ளாரென பலாங்கொடை பொலிஸார் ​தெரிவிக்கின்றனர்.

கடந்த 7ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16 வயதான மாணவர்கள் இருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும், குறித்த தனியார் வகுப்பறை வளாகத்தில் வெற்றிலை எச்சில் காணப்பட்டதாகத் தெரிவித்தே மாணவர்கள் இருவரையும் ஆசிரியர் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலையடுத்து மாணவர்கள் இருவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + fifteen =

*