;
Athirady Tamil News

சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடான நாள்: 9-8-1965..!!

0

தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

1819-ம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரிட்டன் கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824-ல் பிரிட்டனின் நேரடி ஆட்சியினுள் கொண்டு வரப்பட்டது. 1826-ல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945-ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963-ல் ஏனைய பிரிட்டன் குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைக்கப்பட்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்டு 9-ல் மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றில் இருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*