;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!!

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் அமைச்சருடன் கலந்துரையாடல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்புக்குள் செயற்பட வைப்பது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை அமைச்சின் ஊடாக திரட்டி அவற்றை ஆவணப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இவ் விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்துவதாக வவுனியா மாவட்ட உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

இச் சந்திப்பில் குறித்த மன்றத்தின் சார்பில் சுப்பிரமணியம், செ. சபாநாதன், மா. கதிர்காமராஜா உட்பட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + sixteen =

*