;
Athirady Tamil News

விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் : 10-8-2003..!!

0

ரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.

* 1809 – குவிட்டோ (தற்போதய ஈக்வடாரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

* 1904 – ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

* 1913 – பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

* 1944 – இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

* 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

* 2000 – உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது

* 2006 – திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 8 =

*