;
Athirady Tamil News

டெல்லியில் ஆயுதங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது..!!

0

டெல்லியில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது. இதையொட்டி சிறப்பு அதிரடிப்படை போலீசார் டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசிம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆஸ் முகமது ஆகிய இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக டெல்லியில் தங்கி இருந்து சமூகவிரோத கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்ததை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தானியங்கி துப்பாக்கிகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*