;
Athirady Tamil News

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடியேற்றம்..!!

0

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை சனிக்கிழமை(11-08-2018) பிற்பகல்-04.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்களின் நன்மை கருதி சிறப்புப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹோற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் அமைந்துள்ள 20 அன்னதான மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − eight =

*