;
Athirady Tamil News

அளவெட்டி, கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

அளவெட்டி, கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் ரூ.70,000/= பெறுமதியான ஒலிபெருக்கிகருவிகள் அளவெட்டி, கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையத்துக்கு வழங்கிக்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் சனசமூகநிலையத்தலைவர் பவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு மேற்படி பொருட்களை நிலையத்தாரிடம் கையளித்தார்.

மேற்படி நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேசசபைத்தலைவர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், மற்றும் சனசமூக நிலைய நிர்வாகிகள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அளவெட்டி,கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையத்தின் கீழ் கருகம்பனை இந்து இளைஞர் கழகம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் என்பனவும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*