;
Athirady Tamil News

கிளிநொச்சியில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், புனரமைகப்படாத பிள்ளையாா் கோவிலும்..!! (படங்கள்)

0

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், புனரமைகப்படாத பிள்ளையாா் கோவிலும்.

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ் பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவா்களின் வழிபாட்டுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. குறித்த புத்தர் சிலை பல்கலைகழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாய பீடம் பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கபட்டு கல்விச ்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.

இந்த நிலையில் கடந்த வருடம் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைகழக நிா்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும், மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் புத்த கோவிலும் புனரமைக்கப்பட்டும் உள்ளன.

எனவே சில இந்து மாணவா்கள் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையாா் சிலை ஒன்றை வைத்து சிறிய கொட்டில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர் . அதுகும் பல தடைகளுக்கு மத்தியில் நடைபெற்றது

ஒருவருடத்தை கடந்த போதும் வழிபாட்டு உரிமை இல்லாதவர்கலாகவே இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்

புத்த கோவில் இருப்பது பற்றி தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவா்களுக்கு அவா்களின் வழிபாட்டுக்கு அது அவசியம் என்றும் ஆனால் அதே போன்று எங்களுக்கும் எங்களுடைய மத வழிபாட்டுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் மாணவா்கள் கோருகின்றனா்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*