;
Athirady Tamil News

வவுனியா நகரசபையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளுக்கு நகரசபை மறுப்பு..!! (படங்கள்)

0

வவுனியா நகரசபையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளுக்கு நகரசபை மறுப்பு! வியாபாரிகள் குற்றச்சாட்டு!!சிவசக்தி ஆனந்தன் தலைமையில் சுமூகமான தீர்வு

வவுனியா நகரசபையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தமது ஆடிஅமாவாசை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக கொட்டகை அமைத்து தர நகரசபை மறுத்துள்ளதாகவும் மரக்கறி வியாபாரிகள் குற்றச்சாட்டு
வவுனியா நகரில் சதொச வியாபார நிலையத்திற்கு அருகில் காணப்படும் மரக்கறி சந்தையில் 20 பேர் வரை வியாபாரம் செய்து வருகின்றனர். குறித்த கட்டடத் தொகுதியை உடைத்து புதிய கட்டடத்தொகுதி ஒன்றை அமைக்கப்போவதாக வவுனியா நகரசபை குறித்த வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. பின்னர் மாற்றிடம் வழங்க முடியாது என பொறுப்பற்ற வகையில் நகரசபை எமக்கு பதில் அளித்து வருகிறது.

இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி நேற்றைய தினம் எமது வியாபார நிலையங்களுக்கான மின்சாரம் நகரசபையினரால் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை விரத நாள். மரக்கறி வியாபாரம் அதிகமாக நடைபெறும் நாள். நாங்கள் இரவு 9 மணிவரை வியாபாரம் செய்வது வழக்கம். ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு 9 மணி வரை இருட்டில் இருந்தே வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எமது வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன் ஆடிஅமாவாசையை முன்னிட்டு அதிகளவில் கொள்வனவு செய்த மரக்கறி வகைகளையும் விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் இருக்கிறோம்.

நாம் சிறியளவில் முதலீடு செய்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த வருமானத்தை வைத்தே எமது நாளாந்த வாழ்க்கை சீவியம் நடைபெறுகின்றது. நாம் வேறு இடங்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்யக் கூடிய வசதி எம்மிடம் இல்லை. எமக்கான ஒரு சரியான மாற்றிடம் வழங்காத பட்சத்தில் நாம் இந்த மரக்கறி சந்தை கட்டடத் தொகுதியை விட்டு வெளியேறமாட்டோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரிடம் வியாபாரி ஒருவர் தங்களின் கஸ்ட நிலைமையை கூறி தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தருமாறு மிகவும் விநயமாக கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அவ் வியாபாரியின் கோரிக்கையை அடுத்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த நகரசபை தவிசாளர் இ.கௌதமன்

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 2.5 மில்லியன் ரூபாவிற்கு சந்தை கட்டிடத்தொகுதியானது அமையவுள்ளது. அத்துடன் வியாபாரிகளின் கோரிக்கையும் சாதகமாக பரிசீலிக்கப்படும், புதிய கட்டிடம் கட்டப்படவுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்டவுள்ளது என தெரிவித்திருந்தார்.
வியாபாரிகளின் பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபையின் உப தலைவர் எஸ். குமாரசாமி மரக்கறி வியபாரம் செய்யும் வியாபாரிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தினசரிச் சந்தைப்பகுதிக்கு வருகைதந்த வன்னிபாராளுமன்ற உறுப்பினர் வியாபாரிகளின் பிரச்சனையை கேட்டறிந்து கொண்டதுடன் தற்காலிக கொட்டகை அமையவிருக்கும் பகுதியை பார்வையிட்டதுடன் வியாபாரிகளுக்கு அமையவிருக்கும் புதிய கட்டிடம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன்! உடனடியாக வியாபாரிகளுக்கு தற்காலிக கொட்டகையை அமைத்து கொடுக்குமாறு நகரசபை தலைவருக்கு தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சந்தை உள்ளவட்ட வீதியில் அத்துமீறி சுகாதாரமற்ற முறையில் நடைபாதையில் வியாபாரம் செய்த வியாபாரிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் வவுனியா நகரசபை ஈடுபட்டிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*