;
Athirady Tamil News

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி 520 பேர் பலியான நாள்: 12-8-1985..!!

0

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்பிழைத்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 – முதலாம் உலகப் போர்: பிரிட்டன் ஆஸ்திரியா- ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரிட்டன் ராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

* 1952 – மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

* 1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

* 1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாட தடை செய்யப்பட்டது.

* 1978- ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

* 1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

* 1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2-ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

* 1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1990 – அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

* 2000 – கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின்போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

* 2005 – ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் குளத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

* 2005 – மாலைத் தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

* 2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

* 2006 – இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 16 =

*