;
Athirady Tamil News

வீதி விளக்குகள் முகாமைத்துவம் தொடர்பில் தேசிய திட்டம்..!!

0

வீதி விளக்குகள் முகாமைத்துவம் தொடர்பில் தேசிய திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு இலங்கை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த தேசிய கொள்கை திட்டம் வகுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பொதுமக்களின் ஆலோசனை தொடர்பான மாநாடு நடத்தப்பட்டது. மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை மாநாட்டில் சுமார் 400 பொதுமக்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த வீதி விளக்கு முகாமைத்துவம் தொடர்பான தேசிய திட்டத்தின் கீழ் வீதி விளக்குகளின் தரம், பராமரிப்பு, பொருத்துதல், எரிசக்தி செலவைக் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுடனும் வருட இறுதிக்கு முன்னர் கலந்துரையாடி பயனுள்ள கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதே ஆணைக்குழுவின் இலக்காகும் என்று மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*