;
Athirady Tamil News

கிளிநொச்சியில் ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கடித்துக் கொண்டு உள்ளது.

கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொண்டு தனது இறைக்கு பண்படுத்தி வருகிறது ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது இரைக்கு பயன்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தொடர்பாக பொலிஸாரிடம் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியம் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 13 =

*