;
Athirady Tamil News

ராஜஸ்தானில் இரு காதல் ஜோடிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

0

ராஜஸ்தான் மாநிலம், சிகர் மற்றும் ஜலோர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த இருவேறு சம்பவங்களில் இரண்டு காதல் ஜோடிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சிகர் மாவட்டத்தில் பவன் குமார் மீனா(27) மற்றும் சீமா மீனா(20) ஆகிய இருவரும் காதல் தோல்வி காரணமாக சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதைப்போலவே, ஜலோர் மாவட்டத்தில் சதிஷ் மலி(18) மற்றும் ஆர்த்தி சாய்ன்(18) ஜோடி, ஜோத்பூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இறந்துள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தங்களின் காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும், மேலும், இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 10 =

*